
"குழந்தைகளை விளையாட விடுங்கள்"- பெற்றோர்களுக்கு டோஸ் விட்ட நீதிபதி கிருபாகரன்
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலேயே 8 பாடபிரிவுகள் உள்ளது மிக அதிகம்என வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்து வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குழந்தைகளை விளையாட விடுங்கள்,விளையாட வேண்டிய வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகிறோம் .இதனால் சிறு வயதிலேயே அதிக சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் எனவும்,பாடசுமை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், மற்றதை ஒப்பிடும் போது சிபிஎஸ்இ இல் அதிகமான பாடசுமை இருப்பதால், அதுவும் ஒன்றாம் வகுப்பிலேயே அதிக சுமை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் நீதிபதி
அதுமட்டுமில்லாமல், தனி குடும்பம் என்ற பெயரில் குழந்தைகளை தனியாக பார்த்து வளர்த்து வரும் பெற்றோர்கள் உடன் வேறுயாருமின்றி இருப்பதால், அவர்களை மூன்றரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவது ரியான ஒன்றாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார் கிருபாகரன் .பின்னர் , விசாரணையின் முடிவில் இது போன்ற கருத்துக்களை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து 4 வாரத்தில் மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதில்அளிக்க என வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்