
ஒரே நாளில் புஸ்ஸுன்னு போன "மெர்சல்" -
மெர்சல்பட விளம்பரத்திற்கு இடைகால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தாவது 2014 ஆம் ஆண்டு "மெர்சலாயிட்டேன்" என்ற பெயரைஏற்கனவே பதிவு செய்து விட்டதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்
தேனாண்டாள் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் வெளிவரும் விஜய்யின் இரண்டாவது படமான மெர்சல் பட விளம்பரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது
மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டே தான் பதிவு செய்து இருப்பதாக தயாரிப்பாளர் ராஜெந்திரம்ன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேனாண்டாள் தயாரிப்பான இந்த "மெர்சல்" பட விளம்பரத்தை தடை செய்தால், பெரும் நஷ்டம் ஏற்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்
இருந்த போதிலும், விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், மெர்சல் விளம்பரத்திற்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதாவது அக்டோபர் 3 வரை இந்த தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக, மெர்சல் பட டீசருக்கு கிடைத்த பெரும் வெற்றி தற்போது புஸ்ஸுன்னு இறங்கும் நிலை உருவாகி உள்ளது. அதாவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மெர்சல் படம் வெளியாவதில் கூட தாமதம் ஏற்படும் என தெரிகிறது
மெர்சல் பட டீசர் நேற்று வெளியாகி அனைவரையும் மெர்சலாக்கிய ஒரே நாளில் இப்படி புஸ்ஸுன்னு காத்து போனதை நினைத்து விஜய் ரசிகர்கள் அப்சட் ஆகியுள்ளனர்