நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகுமா.?விசாரணைக்கு ஆஜரான ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவிட்ட சித்த மருத்துவத்துறை

By Ajmal KhanFirst Published Jan 24, 2023, 1:40 PM IST
Highlights

ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, நல்லவர்களுக்கு தான் குழுந்தை பிறக்கும் என சித்த மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் சர்ச்சைக்குள்ளான மருத்துவ ஆலோசணைகளை வழங்கியதாக புகார் எழுந்த  நிலையில் இந்திய மருத்துவமுறை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சித்த மருத்துவரும் சர்ச்சை கருத்தும்

மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஒரே ஒரு  குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், முகம் பொழிவு பெற தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் நெய் சாப்பிட வேண்டும்  என பல்வேறு கருத்துகளை யூட்யூப்பில் சித்தா மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்து வந்தார். இந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சித்த மருத்துவர் மீது ஷர்மிகா புகார் அளிக்கப்பட்டது. 

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..! டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை - காவல்துறை அதிரடி உத்தரவு

ஒரு ப்ளோல சொல்லிட்டேன்

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த டாக்டர் ஷார்மிகா, தனது கருத்தை தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில், இனிப்பு சாப்பிட்டால் எடை கூடும் அதைவைத்து தான் ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டா 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன் என தெரிவித்து இருந்தார். மேலும் நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன் என விளக்கம் அளித்தார். இந்தநிலையில்  சித்தா மருத்துவர் ஷர்மிகா தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து 15 நாட்களுக்குள்  இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் குற்றச்சாட்டு

இதனையடுத்து இன்று சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார். இதனையடுத்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் ஆலோசனை வழங்கியதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து வந்த புகார்கள் குறித்த விவரங்கங்களையும் டாக்டர் ஷர்மிகாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

 நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகுமா.? தவறான தகவலை கூறினாரா ஷர்மிகா.? செக் வைத்த இந்திய மருத்துவமுறை ஆணையம்

click me!