மருதமலை கோயில் வேல் திருட்டா? அறநிலையத்துறை விளக்கம்!!

Published : Apr 03, 2025, 12:59 PM ISTUpdated : Apr 03, 2025, 05:13 PM IST
மருதமலை கோயில் வேல் திருட்டா? அறநிலையத்துறை விளக்கம்!!

சுருக்கம்

கோவையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் மாயமானது. இது அறநிலையத்துறைக்கு சொந்தமான மண்டபம் இல்லை என்றும், கோயிலில் இருந்து திருடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 Marudhamalai temple VEL  கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் நாளை கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது.

இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் 4 லட்சம் மதிப்பிலான வேல் உள்ளது. இந்த வேல் திடீரென மாயமான நிலையில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது சாமியர் வேடத்தில் வந்த நபர் அந்த வேலை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு மத்தியில் கோயில் வேல் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தியான மண்டபம் - அறிநிலையத்துறை சொந்தம் இல்லை

இந்த நிலையில் வேல் மருதமலை கோயிலில் இருந்து திருடப்படவில்லையெனவும், அந்த தியான மண்டபம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன. கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.

மருதமலை கோயிலில் நடைபெறவில்லை

இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக திரு. குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.  மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும்,  இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என  கோவை மண்டல இணை ஆணையர் திரு. பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!