
அரியலூர்
அரியலூரில் அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள சொக்கலிங்கபுரம் சாலைத் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற மணிவண்ணன் (32). இவர் ஒரு கூலித் தொழிலாளி.
இவர் வியாழக்கிழமை இரவு பாப்பாக்குடிக்கு சைக்கிளில் சென்றுவிட்டு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வெண்ணங்குழி பிரிவுச் சாலை அருகே அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் செயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.