செல்போன் கோபுரங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது - பிஎஸ்என்எல் ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம்...

 
Published : Feb 03, 2018, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
செல்போன் கோபுரங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது - பிஎஸ்என்எல் ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம்...

சுருக்கம்

Do not hand over cell phone towers - BSNL employees Satyagraha

விருதுநகர்

செல்போன் கோபுரங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருதுநகரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம், பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க தேசியப் பொதுச்செயலாளர் செல்லப்பா தலைமை தாங்கினார்.  

இந்தப் போராட்டத்தில் மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதில், "செல்போன் கோபுரங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது.

ஓய்வு வயதை 60 லிருந்து 58 ஆக குறைப்பதை ரத்து செய்ய வேண்டும்.

பிஎஸ்என்எஸ் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி ராம்சேகர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த 230 ஊழியர்கள் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!