
வாகன ஓட்டிகளுக்கு good news லஞ்சம் வாங்கும் Traffic police-க்கு ஆப்பு தமிழக அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. ஓட்டுநர்களிடம் போலீசார் மோசமாக நடந்துகொள்வது, லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தாலும், ஹெல்மெட் இல்ல, சீட்பெல்ட் போடல, ஓவர் ஸ்பீட் என வாகன ஓட்டிகளிடம் பணத்தை புடுங்கும் டிராபிக் போலீசுக்கு வந்துவிட்டது சரியான ஆப்பு.
வாகனூட்டிகளிடம் லைசன்ஸ், வாகனத்தின் முக்கிய இல்லாதவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்கள் ஆகியோர்களிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் பெறுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகளும் போலீசாரிடம் அத்துமீறி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களைந்து நல்லிணக்கத்தை மேம்படுத்த போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமிரா பொருத்தப்படுகிறது.
சோதனை அடிப்படையில் இந்த கேமிராக்களை தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பதிவாகும் வீடியோ மூலம் போக்குவரத்து காவல் துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த சோதனை முயற்சி வெற்றியாகும் பட்சத்தில் எதிர்காலத்தில் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் சட்டையில் கேமிரா பொருத்தப்பட்ட இதில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு Good News... லஞ்சம் வாங்கும் Traffic Police-க்கு ஆப்பு!
கடந்த வாரம், ஓ.எம்.ஆர் சாலையில், சமீபத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்ற டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால் அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை என்ற பெயரில் ஆபாசமான வார்த்தைகளை பேசியதால் போலீசாரின் பேச்சார் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் ஒருவரை கமிஷனர் விஸ்வநாதன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும், விரட்டிச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் விதித்திருந்தார். இந்த உத்தரவையும் மீறி போலீசாரின் அடாவடியால் ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது நேற்று அரங்கேறியது.
மணிகண்டன் தீயிட்டு கொளுத்திக் கொண்ட ஓ.எம்.ஆர். சாலையில்இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ஓ.எம்.ஆர். சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உள்ளார். ஆனால், இரு சக்கர வாகனம், லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இப்படி அடிக்கடி லஞ்சத்துக்காக செய்யும் வேலைகளால் உயிரிழப்பு நேருவதால், தமிழக காவதுரை அடுத்த ஆப்பை வைத்துள்ளது.