Tamilnadu 12th exam 2022 : மாணவர்களே !! உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.. 'பொதுத்தேர்வு' எப்போது தெரியுமா ?

Published : Feb 25, 2022, 01:58 PM ISTUpdated : Feb 25, 2022, 02:44 PM IST
Tamilnadu 12th exam 2022 : மாணவர்களே !! உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.. 'பொதுத்தேர்வு' எப்போது தெரியுமா ?

சுருக்கம்

இன்று மாலை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மாலை சரியாக 4 மணிக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வை நடத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முனைப்பு காட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தரவை சந்திக்கவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?