
குடி போதையில் கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி ராஜா காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்று மாலை கல்லூரி முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் தள்ளாடியடி வந்த நபர் செல்வி நடந்து செல்வதை பார்த்துள்ளார். உடனே அவர் அருகில் சென்று திடீரென கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத செல்வி கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குடி போதையில் செல்வியிடம் சில்மிஷம் செய்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க காவல்துறை குடி மகனை காவல் நிலையத்திற்கு அள்ளி சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் அன்பழகன் என்றும் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் என்று கூறியுள்ளார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்பழகனின் செயலால் அதிர்ச்சியடைந்த செல்வியை பெண்காவலர் உதவியுடன் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர்.