
ஈரோடு சத்தியமங்கலம் அருகே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 5 குழந்தை தொழிலாளர்களை குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் மீட்டனர்.
ஈரோடு செஞ்சனூர் பகுதியில் பனியன் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, 14,16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சிறுவர்கள் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அந்த நிறுவனத்திடம் இருந்து 5 சிறுவர்களையும் ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் மீட்டனர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி புன்னகையை தேடி என்ற திட்டத்தின் கீழ் இந்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.