இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.!இரங்கல் தெரிவித்ததோடு நிவராண உதவி அறிவித்த மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Apr 16, 2023, 8:04 AM IST

விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
 


பட்டாசு ஆலை விபத்து

சிவகாசி அருகே பட்டா ஆலையில் பூத்தோட்டி எனப்படும் பட்டாசுகளை தயாரிக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  விருதுநகர்மாவட்டம்,சிவகாசிவட்டம்,ஆணையூர்கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்சிவகாசி வட்டம், மம்சாபுரம், இடையன்குளத்தைச் சேர்ந்த திரு.தங்கவேல் த/ப.வெள்ளைச்சாமி (வயது65) மற்றும் திரு.கருப்பசாமி, த/பெ.பிச்சை (வயது 28) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

Tap to resize

Latest Videos

ஊழலை ஒழிப்பதற்காகவே பிறந்தவர் போல பேசிவருகிறார் அண்ணாமலை; கே பி முனுசாமி பாய்ச்சல்

முதலமைச்சர் இரங்கல்

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமமைனயில் சிகிச்சை பெற்றுவருபவரும் திருமதி.கருப்பம்மாள், க/பெ.வடக்கத்தியான் என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும்.எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

நானும் காங்கிரஸ் மாநில தலைவராகத்தான் இருக்கேன்.! ஒரு வருடமாக வீட்டு வாடகை கட்ட முடியவில்லை-கேஎஸ் அழகிரி

click me!