அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்

By Raghupati R  |  First Published Apr 15, 2023, 8:33 PM IST

அண்ணாமலை புகாருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.


சென்னையில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆல்ட்ஸ்டாம் நிறுவனத்திடமிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 200 கோடி ரூபாய் பெற்றதாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர் எதையும் வழங்கவில்லை. அதைப் போல செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொல்லப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்போவதாக திமுக தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

2006-11 கால கட்டத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டப் பணிக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.14,600 கோடி. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக அல்ஸ்டாம் நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ரூ.200 கோடியை லஞ்சமாக கொடுத்துள்ளது. இதில் முதல்வர் மீது நேரடியாக ஊழல் புகாரை சுமத்துகிறேன்.

மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 15% இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்றார். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டப்பணியின் போது எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக விதிகள் திருத்தப்படவில்லை. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதமாக முடிவு எடுக்கப்பட்டதாக அண்ணாமலை கூறிய புகார் தவறானது என மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..உங்க பாச்சா எல்லாம் எங்ககிட்ட பலிக்காது.. முடிஞ்சா ரிலீஸ் பண்ணு - அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜெயக்குமார்

இதுகுறித்து வெளியிடப்பட்ட  அறிக்கையில்,சென்னை மெட்ரோ நிறுவனம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனம் இணைந்து இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திய நிலையில், ஆல்ஸ்டன் நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த டெண்டர் விவகாரத்தில் நியாமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, ஒப்பந்தம் நடந்துள்ளதாகவும், முறைகேடுகள் எதுவும் நடக்க வில்லை என கூறியிருக்கிறது. அனைத்து புகார்களும் தவறானவை, இந்த புகார்களை முற்றிலும் மறுப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி

click me!