அலெர்ட்.! இன்று தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது மக்களே.! எங்கெல்லாம் தெரியுமா ?

By Raghupati RFirst Published May 6, 2022, 7:48 AM IST
Highlights

Today Rain In Tamilnadu : தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது.

இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இன்று கன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பதூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தை இவ்வளவு நாள் வாட்டிவதைத்த வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : இன்று தொடங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு..இதை பின்பற்றியே ஆகணும் தெரியுமா ?

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

click me!