அதிர்ச்சி செய்தி ! தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது.. 'திடீர்' போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள் !!

Published : Mar 25, 2022, 02:06 PM IST
அதிர்ச்சி செய்தி ! தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது.. 'திடீர்' போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள் !!

சுருக்கம்

மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

வேலை நிறுத்தம் :

மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.  இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆட்டோக்கள் ஓடாது :

இதற்கிடையில் வேலை நிறுத்தம் நடக்க கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்களும் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 2 நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. சென்னையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடக்கிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது குண்டர் சட்டம்.. சட்டம் சொல்வது என்ன? இதை படிங்க!
தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது