வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை பவுடர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இதனை விற்பனை செய்தவர்கள் கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டையில் வலி நிவாரணி மாத்திரை களை கரைத்து ஊசியில் அடைத்து உடலில் ஏற்றிக் கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருள்
undefined
வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை பவுடர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இதனை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் வண்ணாரப்பேட்டை காவல் எல்லை உட்பட்ட கிழக்கு கல்லறை சாலை பகுதியில் போதை ஆசாமிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை.. 14 ஆண்டுகளாக இதே பொழப்பாக செய்து வந்த ஆசிரியர் கைது.!
ஊசிகள் பறிமுதல்
அப்போது அங்கு ஒரு கும்பல் தங்களது உடலில் போதை ஊசி செலுத்தி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 6 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (24), பழைய வண்ணா ரப்பேட்டை சேர்ந்த சையது அசார் (25), கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற கோழி உதயா (26), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (25), வினோத் (24), கார்த்திக் (24) என்பது தெரியவந் தது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
6 பேர் கைது
இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் மலிவு விலையில் போதை மாத்திரைகள் வாங்கி வந்து, மருந்தகங்களில் கிடைக்கும் வலிநிவாரணி மாத்திரைகளையும் சேர்த்து கரைத்து ஊசியில் அடைத்து அவற்றை தங்களது உடலில் போட்டுள்ளனர். போதை தலைக்கேறியதும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் இவர்களிடம் போதை மாத்திரை வாங்க வருபவர்களிடம் போதை ஊசி செலுத்தி கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேர் மீதும் போதை தடுப்புப் பிரிவின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- 17 வயது பள்ளி மாணவனை கரெக்ட் செய்து திருமணம் செய்த 26 வயது ஆசிரியை.. 20 நாட்களாக என்ன செய்தார் தெரியுமா?