அரசு பேருந்துகள் இனி இந்த ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும்.. கடுமையான நிபந்தனைகள் வெளியிட்ட போக்குவரத்து துறை.!

Published : Mar 25, 2022, 05:32 AM IST
அரசு பேருந்துகள் இனி இந்த ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும்.. கடுமையான நிபந்தனைகள் வெளியிட்ட போக்குவரத்து துறை.!

சுருக்கம்

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகத்தில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகத்தில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

* உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். 

*  சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.

*  கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

*  உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். 

*  பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

*  பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.

*  உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

*  உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். 

*  உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். 

*  பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். 

*  உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். 

*  உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!