
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கியது. விழாவில் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்த புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. மதுரை ரிங்ரோடு பாண்டி கோயில் பகுதியில் உள்ள அம்மா திடலில் இந்த விழா நடைபெற உள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசா, எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை வைத்தார். விழாவில், அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பெருமைகளைக் கூறும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், யோகா நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பரதநாட்டியம், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி, அதனை பார்வையிட்டு வருகிறார்.