
திருச்சி
திருச்சியில் திருட்டுத்தனமாக மணல் கடத்திவந்த இருவர் மீது வழக்குப்பதிந்த காவலாளர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திண்ணக்கோணம் பகுதியில் உள்ள ஐயாற்றில் டிராக்டரில் மணல் திருடுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி, நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் வருவாய்த்துறையினர். அப்போது, திண்ணக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (35), அதே பகுதியை சேர்ந்த பழனிசாமிக்குச் சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டுவந்துள்ளார்.
டிராக்டரை கைகாட்டி மறித்து அதில் சோதனை நடத்திய வருவாய்த்துறையினர் அதில் திருட்டுத்தனமாக மணம் கடத்திவந்ததை கண்டுபிடித்தனர்.
அதன்படி டிராக்டரை பறிமுதல் செய்து, மனோகரன், பழனிச்சாமி மீது ஆமூர் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் காவலாளர்கள் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.