நிறைவடைந்தது புத்தக கண்காட்சி.!இத்தனை கோடிக்கு புத்தகம் விற்பனையா.? அதிகமாக விற்பனையான புத்தகம் எது தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Jan 23, 2023, 8:59 AM IST
Highlights

 46வது புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 17 நாட்களில்,15 லட்சம் வாசகர்கள் கலந்து கொண்டு 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாக தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சென்னை புத்தக கண்காட்சி

46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 1,000 அரங்குகளுடன் இந்த புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்த புத்தக கச்காட்சியில் குழந்தைகள் புத்தகங்களுக்கு என தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், என லட்சக்கணக்கான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. சுமார் 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சி நேற்றோடு நிறைவடைந்தது. இந்தநிலையில் புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்களான தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் புத்தக விற்பனை தொடர்பாக கூறுகையில், 

ஒரு வழியாக வழிக்கு வந்த ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு!


 இத்தனை கோடிக்கு புத்தகம் விற்பனையா.?

46வது சென்னை புத்தகத் திருவிழா நேற்றுடன்(ஜன.22) நிறைவடைந்துள்ளது.  17 நாட்கள் நடைபெற்ற 46வது புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 6 லட்சம்  வாசகர்கள் கூடுதலாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த நான்கைந்து தினங்களாக தினசரி ஒரு லட்சத்துக்கும் மேல் வாசகர்கள் வருகை புரிந்தனர் இந்தாண்டு 15 லட்சம் வாசகர்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 16 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதல்வரின் பேராதரவுடன் 46வது புத்தக கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை புத்தக கண்காட்சியில் இல்லம்தேடி கல்வி திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்கங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டது அது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! போட்டியிடும் கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக

சென்னையில் புத்தக பூங்கா

தினந்தோறும் நடைபெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் மேடையில் 100 க்கும் மேற்பட்ட புதிய நூல்களை வெளியிட்டு உள்ளோம். இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் மூலம் தமிழ் பதிப்பாளர்களின் புத்தகங்கள் சர்வதேச அளவில் விற்பனை பெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்ததற்கு தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் புத்தகப் பூங்கா அமைத்து தருவதாக தமிழ்நாடு முதல்வர் உறுதி அளித்துள்ளார். கூடிய விரைவில் சென்னையில் புத்தகப் பூங்கா அமையும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவின் எந்த அணியும் போட்டியிடாது..! பாஜக தான் வேட்பாளரை நிறுத்தம்- ஈவிகேஎஸ்

click me!