கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்தும், வீடு மற்றும் பைக்கையும் உடைத்த திமுக கிளை செயலாளர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக- திமுக மோதல்
மதுரை மாவட்டம கருவனூர் பகுதியில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் விழா கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் யாருக்கு முதல் மரியாதை செலுத்துவதில் என இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் உள்ள முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்திற்கும், திமுக கிளைச்செயலாளர் வேல் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக கிளைச்செயலாளர்களின் ஆதரவாளர்கள் மாஜி எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது காரை எரித்தும், வீட்டிற்குள் புகுந்து பைக், டீவி ஆகியவற்றை உடைத்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாஜி எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்
வன்முறை சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் காவல்நிலைத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து திமுக கிளைச்செயலாளர் வேல்முருகனை தேடி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலமும், திமுக கிளைச்செயலாளர் வேல்முருகனும் உறவினர்கள் என கூறப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ வீடு மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்
பழனி கோயிலுக்குள் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி.! அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றம்- சீறும் எச்.ராஜா