விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யுமா.? வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

By Ajmal Khan  |  First Published Feb 20, 2024, 6:57 AM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


தமிழக வேளாண் பட்ஜெட்

தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தமிழக பட்ஜெட்டோடு சேர்த்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 4வது வேளாண் பட்ஜெட் ஆகும். நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை, மெட்ரோ ரயில் திட்டம், கல்வி கடன், மகளிர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

கரும்பு விவசாயிகளுக்கு முக்கியத்துவம்

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே இன்றைய வேளாண் பட்ஜெட்டில்  நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பட்ஜெட்டாக இருக்கும் என தெரிகிறது.  கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அளித்தது போன்று இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனால், இன்று தாக்கல் செய்யும் வேளாண்ைம பட்ஜெட் விவசாயிகளிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா.?

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலை, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உட்பட விவசாயம் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பதிலுரை வழங்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை... ஓய்வின்றி உழைப்போம்.! இந்தியாவை வெற்றி பெற செய்வோம்- ஸ்டாலின் சூளுரை
 

click me!