6 பெட்டிகள்.. வைரம் முதல் தங்கம் வரை .. தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் நகைகள்.. நீதிமன்றம் அதிரடி!

By Raghupati R  |  First Published Feb 19, 2024, 11:33 PM IST

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவை மீண்டும் தமிழகத்திற்கு திரும்புகிறது. இதுதொடர்பான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் 1991 முதல் 2016 வரை 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. முதல்முறையாக முதலமைச்சராக பதவி வகித்த 1991 - 96 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதன் காரணமாக 2001 மற்றும் 2011 காலக்கட்டங்களில் இரண்டு முறை பதவி பறிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தியது. 

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 14 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள், ரத்தினக் கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் உள்பட 468 நகைகள் பறிமுதல் பட்டியலில் இடம்பெற்றன. அத்துடன், 11 ஆயிரத்து 344 புடவைகளும், 750 காலணிகள் மற்றும் 250 சால்வைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

சசிகலா தண்டனை பின்னணி:

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் 2014 செப்டம்பரில், ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வருடன், என்.சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என 1,136 பக்க தீர்ப்பில் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்தார். அவர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் மே 11, 2015 அன்று விடுவித்த போதிலும், உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 14, 2017 அன்று தண்டனையை உறுதி செய்தது.

ஆனால், அதற்குள் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மற்ற மூவரும் நான்கு ஆண்டுகள்  சிறை தண்டனையை அனுபவித்து அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.

click me!