வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.!

By vinoth kumar  |  First Published Feb 18, 2024, 10:22 AM IST

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.


மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதன் காரணமாக, சென்னை அடையார் - இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

OMR நோக்கி செல்லும் வாகனங்கள் :

* MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, 21 ஆவது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* கலாக்ஷேத்ராவிலிருந்து OMR நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும்.

* KBN-லிருந்து OMR நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.

LB ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் :

* OMR-லிருந்து 2 ஆவது அவென்யூ வழியாக LB சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக அவ்வாகனங்கள் 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். 

* கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

KBN நோக்கி செல்லும் வாகனங்கள் :

* OMR மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து KBN சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

click me!