பயணிகளுக்கு முக்கிய செய்தி.. 15 புறநகர் மின்சார ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By vinoth kumar  |  First Published Feb 17, 2024, 7:09 AM IST

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.


பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது விடுமுறை தினங்களில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதும், ரயில் சேவை குறைக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம்.! யார்.?யார் இடம்பெற்றுள்ளார்கள் தெரியுமா.? தமிழக அரசு வெளியிட்டது அரசாணை

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பிப்ரவரி 17ம் தேதி இரவு 10.25 மணி முதல் பிப்ரவரி 18ம் தேதி காலை 4:30 மணிவரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுள்ளது. அதேபோல் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாகவும், 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!

click me!