ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா.? 2 ரூபாய் உயர்த்தி பாக்கெட்டில் அச்சடிப்பு- விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம்

By Ajmal KhanFirst Published Jan 1, 2023, 8:54 AM IST
Highlights

ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை 2 ரூபாய் அதிகரித்து பால் பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 

பால் விலை உயர்வா.?

சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அத்தியாவசிய தேவையாக பால் உள்ளது. ஆவின் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை உயர்த்தியது. வெண்ணெய்,நெய் போன்றவற்றின் விலையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பச்சை பால் பாக்கெட் விலையை 2 ரூபாய் உயர்த்தப்பட்டு பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைமுகமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

பிறந்தது 2023 புத்தாண்டு... மக்கள் கோலகல கொண்டாட்டம்... கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

ரூ.2 விலை உயர்வா.?

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், நேற்று (31.12.2022) மதியம் ஆவின் பால் முகவர்களுக்கு சென்னையில் விநியோகம் செய்யப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் (இன்றைய 01.01.2023 தேதியிட்ட) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால்) 22.00க்கு பதிலாக 24.00ரூபாய், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான விலை 21.00க்கு பதிலாக 23.00ரூபாய் என அச்சிடப்பட்டு வந்துள்ளது. ஒருவேளை ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் விற்பனை விலையை முன்னறிவிப்பின்றி ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளதா...? என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே இதனை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.

அச்சு இயந்திரத்தில் கோளாறு

இதற்க்கு விளக்கம் அளித்த ஆவின் நிர்வாக இயக்குனர், பால் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்படும் விலை அச்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு (coding error) காரணமாக பால் பாக்கெட்களின் மீது சரியான விலைக்கு பதிலாக வேறு விலை அச்சாகி விட்டது என்பதைத் தவிர ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வித விலை மாற்றமும் இல்லை  மற்றும் விலை உயர்வும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது இதற்கு காரணமான உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

காவல் அதிகாரிகள் தலைமை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம்..! திடீர் உத்தரவிட்ட டிஜிபி- என்ன காரணம் தெரியுமா.?
 

click me!