மு.க.ஸ்டாலினை சந்தித்த தங்கதமிழ் செல்வன்..! திடீர் லண்டன் புறப்பட்டார்.. என்ன காரணம் தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Sep 6, 2022, 11:56 AM IST
Highlights

தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையை கட்டிக்கொடுத்த பென்னிகுக் சிலை திறப்பு விழா வருகிற 10 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் ஐ பெரியசாமி, திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் லண்டன் சென்றுள்ளனர்.
 

பென்னி குக் சிலை திறப்பு

தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்தார். அணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆங்கில அரசு தெரிவித்தது. இருந்தாலும் தான் எடுத்த முயற்சியை விடக்கூடாது என்பதற்காக லண்டனில் உள்ளதனது சொந்தமான சொத்துக்களை விற்று  தமிழக மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தார் பென்னி குக். தனது கடினமான  உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணையால் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் செழுமை அடைந்து மாற்றங்களும் பெற்றுள்ளது.  இதனால், தென் மாவட்ட மக்கள் பென்னிகுக்கை கடவுளாக நினைப்பதும், தங்கள் பிள்ளைகளுக்கும், கடைகளுக்கும்  பென்னிகுக் பெயரை வைத்து மரியாதை செய்தும் வருகின்றனர். 

இபிஎஸ் அரசியல் அனாதை...! ஓபிஎஸ் தலைமையில் விரைவில் அதிமுக பொதுக்குழு...! பெங்களூர் புகழேந்தி அதிரடி

லண்டன் சென்ற அமைச்சர் ஐ பெரியசாமி

இதனையடுத்து தமிழக அரசு சார்பாக  கூடலூர் லோயர் கேம்பில் பென்னிகுக்காக மணிமண்டபம் கட்டி 6 அடி உயரத்தில் வெண்கல சிலையும் திறந்து வைக்கப்பட்டது.  இதே போல மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் உத்தமபாளையத்திலும் பென்னிகுக் சிலையானது நிறுவப்பட்டது. இதனையடுத்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு  இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை அமைக்கப்படும் என  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளியில்  சிலை நிறுவப்படும். லண்டன் வாழ் தமிழர்கள் கேம்பர்ளி நகர் மைய பூங்காவில் சிலையை நிறுவ சட்டப்படி ஒப்புதல் பெறப்பட்டது.

தேசிய, மாநில விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியை விட..! இது தான் எனக்கு சந்தோஷம்- கவிஞர் வைரமுத்து

லண்டன் சென்ற தங்க தமிழ் செல்வன்

இதனையடுத்து சிலை திறப்பு விழா வருகிற 10 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் செல்லவுள்ளார். இவருடன் தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ் செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் சென்னையிலிருந்து லண்டன் சென்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதையும் படியுங்கள்

எஸ்.பி வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்.! அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு.. நீதிமன்றத்தில் வாக்கு வாதம்

 

click me!