ஏசுநாதர் ஆடு மேய்த்து இருக்கிறார், நபிகள் நாயகம் மாடு மேய்த்திருக்கிறார்,உலகின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கூட ஓவியம் வரைந்து கொண்டிருந்தவர் தான். அவர்களோடு என்னை ஒப்பிட விரும்பவில்லை என்றாலும் நானும் வைகை கரையோரம் ஆடு,மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன் தான். செம்மண் புழுதியில் உழுதிருக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தேனியில் கவிஞர் வைரமுத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் பிறந்தவர் கவிஞர் வைரமுத்து.சினிமாத் துறையிலும், இலக்கியத்துறையிலும் மிகப்பெரிய கவிஞராக கோலோச்சி வரும் அவர், "கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை" என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகளுக்கு தலா 20,000 வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக கவிஞர் வைரமுத்து வழங்கினார்.பின்னர் கவிஞர் வைரமுத்து வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த போது அவருக்கு தமிழாசிரியர்களாக இருந்து தமிழ் கற்றுக் கொடுத்த உத்தமன், மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து அவர்களிடம் ஆசி பெற்றார்.
இபிஎஸ் அரசியல் அனாதை...! ஓபிஎஸ் தலைமையில் விரைவில் அதிமுக பொதுக்குழு...! பெங்களூர் புகழேந்தி அதிரடி
கல்வி உதவி தொகை வழங்கியது தான் மகிழ்ச்சி
பின்னர் கூட்டத்தினர் மத்தியில் அவர் உரையாற்றிய போது, ஏழு தேசிய விருதுகள், ஆறு மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகள் பெற்ற போதும் அப்போதெல்லாம் கிடைக்காத மகிழ்ச்சி, இன்று ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் இந்த நிகழ்வில் நமக்கு கிடைத்ததாக தெரிவித்தார். மேலும் ஏசுநாதர் ஆடு மேய்த்து இருக்கிறார், நபிகள் நாயகம் மாடு மேய்த்திருக்கிறார்,உலகின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கூட ஓவியம் வரைந்து கொண்டிருந்தவர் தான். அவர்களோடு என்னை ஒப்பிட விரும்பவில்லை என்றாலும் நானும் வைகை கரையோரம் ஆடு,மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன் தான். செம்மண் புழுதியில் உழுதிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
விநாயகரை இழிவுபடுத்திவிட்டார்...? முத்தரசனை கைது செய்திடுக..! இறங்கி அடிக்கும் பாஜக..
பொன்னாடை போற்றினால் கூச்சம்
தமிழன் ஒரு காலத்தில் ஓராடை மட்டுமே அணிந்து வந்தான். இடுப்புக்கு கீழே கட்டும்போது வேட்டியாகவும், குளிக்கும் போது துண்டாகவும்,படுக்கும் போது பாயாகவும் ஓராடையை மட்டுமே கட்டியிருந்த தமிழனுக்கு அனுவிக்கப்பட்ட மேலாடை தான் பின்னாளில் பொன்னாடை போர்த்தும் கலாச்சாரமாக மாறியது. பிறர் எனக்கு பொன்னாடை அணிவிக்க வரும்போது, ஒரு வித கூச்சத்துடன் ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் அனுபவிப்பவர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைவதால்,அவர்களது சந்தோஷத்திற்காக பொன்னாடையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் ஆறு பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பெரிய விஷயம் அல்ல.இதை எதிர்காலத்தில் 100 பேருக்கு வழங்கும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக நான் இன்னும் நிறைய பொருள் ஈட்ட வேண்டும், ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்
திருமண வீட்டார் உஷார்...! வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட மதுரை மல்லி விலை...!