திருமண வீட்டார் உஷார்...! வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட மதுரை மல்லி விலை...!

By Ajmal Khan  |  First Published Sep 6, 2022, 9:44 AM IST

முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
 


பூக்களின் விலை அதிகரிப்பு

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது  இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 1500 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து  விற்பனையானது. அதனை தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது இதனால் ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

பொது இடங்களில் குப்பை கொட்டிய, சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு அபராதம்... சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!

மழையால் வரத்து குறைவு

மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த நாள் என்பதால் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 250 ரூபாய்,300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி,முல்லை 1500 ரூபாய்க்கும்.50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும்   விற்கப்படுகிறது இதனால் வியாபாரம் மந்தமாக காணப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகருத்திருப்பதன் காரணமாகவும் விலையானது அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

விநாயகரை இழிவுபடுத்திவிட்டார்...? முத்தரசனை கைது செய்திடுக..! இறங்கி அடிக்கும் பாஜக..

 

click me!