
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலும் பருவ மழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவி வந்தது.
இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கன மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 4 மணி நேரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடும் வெய்யிலில் அவதி பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.