தாமரை மாநாடு.. YMCA மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் - சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Ansgar R |  
Published : Mar 04, 2024, 05:04 PM ISTUpdated : Mar 04, 2024, 05:05 PM IST
தாமரை மாநாடு.. YMCA மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் - சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சுருக்கம்

PM Modi in Chennai : தாமரை மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று மார்ச் 4ம் தேதி சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

ஏற்கனவே அண்ணாமலை நடத்தி வந்த "என் மனம் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி இன்று மார்ச் 4ம் தேதி திங்கள்கிழமை சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" என்கின்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தற்பொழுது சென்னை வந்திருக்கிறார். 

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் இன்று பங்கேற்பதை தொடர்ந்து ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பானது சென்னையில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும் என்றும் நேற்றைய தினமே சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: மார்ச்.6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி - எப்படி அனுமதி சீட்டு பெறுவது?

மோடி அவர்களுடைய வருகையைத் தொடர்ந்து நந்தனம் பகுதியில் பாஜக தொண்டர்கள் தொடர்ச்சியாக குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மோடி தமிழகத்திற்கு வருவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருச்சி, மதுரை, பல்லடம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு அவர் வந்திருந்தார்.

மந்திர பெட்டியை தொட்டா 5000 வரை Cashback.. பிரதமர் படத்தோடு வந்த விளம்பரம்.. அம்பலமான நூதன மோசடி - உஷார்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி