
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்டியுள்ளது. வரும் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என கூறி வரும் விஜய், சட்டமன்ற தேர்தலில் தனித்து நிற்க முடிவு செய்து விட்டார். இதேபோல் வழக்கம்போல் தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி மக்களின் நம்பிக்கைவை வைத்து களம் காண்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து தவெக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி சமூகவலைத்தளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே வரும் தேர்தலில் விஜய் வெஸ் சீமானில் அதிக வாக்குகளை அறுவடை செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியலில் இருவருக்குமே செல்வாக்கு இருந்து வரும் நிலையில், படிப்பில் யார் டாப்? விஜய்யா? சீமானா? என்பது குறித்து பார்க்கலாம்.
செந்தமிழன் சீமானை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் (B.A. Economics) பயின்று பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அதன்பிறகே சினிமாவுக்கு வந்து அரசியலில் கால்பதித்தார்.
விஜய் என்ன படித்துள்ளார்?
தளபதி விஜய்யை பொறுத்தவரை சென்னையில் உள்ள பாலோக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை லோயோலா கல்லூரியில் (Loyola College) விஷுவல் கம்யூனிகேஷன் (Visual Communication) படிப்பில் சேர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதான ஈடுபாட்டினால் , கல்லூரியின் இறுதியாண்டுகளில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மனதில் இடம்பிடிக்கப் போவது யார்?
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இருவரும் கிட்டத்தட்ட பட்டப்படிப்பு படித்துள்ளனர் என்றே வைத்துக் கொள்ளலாம். அரசியலை பொறுத்தவரை படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபடு கிடையாது. இவர் நமக்கு நல்லது செய்வார்? என மக்கள் நம்பிக்கை வைத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் அரியணை ஏற்றி விடுவார்கள். இதற்கு பெருந்தலைவர் காமராஜரை உதாரணமாக சொல்லலாம். ஆகவே மக்கள் மனதை தொடப்போவது விஜய்யா? சீமானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.