திமுக கூட்டணியில் இருந்து விலகியது தமிழக வாழ்வுரிமை கட்சி..! வேல்முருகன் பரபரப்பு அறிவிப்பு

Published : Mar 22, 2026, 12:10 PM IST
Velmurugan

சுருக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சி வைத்த 10 கோரிக்கைகளில் ஒன்றைக் கூட திமுக ஏற்காத நிலையில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1 மாத காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணியை உறுதி செய்வதில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இழுபறியில் இருந்து வந்த திமுக, தவாக கூட்டணி பேச்சு இன்று இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக தவாக சார்பில் போட்டியிட 2 தொகுதிகளை ஒதுக்க கோரப்பட்ட நிலையில் திமுக அதற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லை. மாறாக நிபந்தனை வைக்கும் இடத்திலா நிங்கள் இருக்கிறீர்கள் என மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்பி காயப்படுத்தியதாக வேல்முருகன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் கடந்த முறை ஒதுக்கப்பட்ட பண்ருட்டி தொகுதியை மட்டுமே இந்த முறையும் ஒதுக்க முடியும். அந்த தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமென கராராக தெரிவித்துவிட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். தவாக சார்பில் அறம் சார்ந்து வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளையும் திமுக நிராகரிததன் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மேலும் 10 கோரிக்கைகளையும் ஏற்கும் அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதுரை டூ நீலகிரி.. 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வெயிலுக்கு ரெஸ்ட்!
தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO