மாஸ் காட்டும் தளபதி.. த.வெ.க உறுப்பினர் சேர்க்கை - சில நிமிடங்களில் சர்வர் டவுன் ஆகும் அளவிற்கு வந்த Requests!

Ansgar R |  
Published : Mar 08, 2024, 07:43 PM IST
மாஸ் காட்டும் தளபதி.. த.வெ.க உறுப்பினர் சேர்க்கை - சில நிமிடங்களில் சர்வர் டவுன் ஆகும் அளவிற்கு வந்த Requests!

சுருக்கம்

Thalapathy Vijay : தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் தளபதி விஜய் அவர்கள் இன்று மாலை தனது கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கான செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்துவரும் ஒரு மாபெரும் நடிகர் தான் தளபதி விஜய். தற்பொழுது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் அவர் அடுத்தபடியாக நடிக்கவிருக்கும் தனது 69வது திரைப்பட பணிகளை முடித்த பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்கின்ற அறிவிப்பை இவ்வருட துவக்கத்தில் அவர் வெளியிட்டார். தளபதி விஜய் அவர்கள் அரசியலில் நுழைந்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தாலும், இனி தங்கள் அபிமானமான நாயகனை திரையில் காண முடியாது என்கின்ற சோகமும் அவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது. 

Female Oriented Movies: பெண்களை போகப்பொருளாக ஆக்காமல் உயர்வாக சித்தரித்த டாப் 5 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்றாலும் கூட, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தளபதி விஜய் அவர்கள் களம் காண்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தங்களது தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைய புதிய செயலி ஒன்றை இன்று மாலை தளபதி விஜய் அவர்கள் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அந்த செயலி துவங்கப்பட்ட வெகு சில நிமிடங்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செயலியானது முற்றிலுமாக முடங்கியுள்ளது. சர்வர்கள் முடங்கி உள்ள இந்த சூழ்நிலையில் விரைவில் அவை சரி செய்யப்பட்டு மீண்டும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது இவ்ளோ ஈஸியா? உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்து விஜய் கொடுத்த விளக்கம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி