
TVK Maanadu Thalapathy Vijay Ramp Walk: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்து கொண்டனர். விஜய்யின் இந்த டிவிகே மாநாட்டிற்கு ஜெயம் ரவி, நடிகர் பிரபு, சிபிராஜ், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
த.வெ.க மாநாடு; அரசியல் கட்சி தலைவராக துள்ளிக்குதித்து மேடைக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!
இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தீம் பாடலான தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடலுடன் மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. இறுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் மேடைக்கு வருகை தந்தார்.
முதலில் மேடையிலிருந்து ரசிகர்களை வணங்கிய அவர், பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த 800 மீ தூரத்திற்கு நடை மேடையில் நடந்து சென்று ரசிகர்கள் கொடுத்த கட்சி துண்டை அணிந்து கொண்டு அவர்களை வணங்கினார். இதைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.