விஜய் கல்வி விருது வழங்கும் விழா.. தடபுடலாக தயாராகும் விருந்து.. மதிய உணவு பட்டியல் இதோ..

By Ramya s  |  First Published Jul 3, 2024, 9:42 AM IST

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்படும் உள்ள மதிய உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகையை வழங்கினார்.

இந்த நிலையில் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் இந்த ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார். அதன்படி முதல்கட்டமாக கடந்த 28-ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது.

Latest Videos

Education Award: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'கல்வி விருது 2.0' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் வருகை!

இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். 750 மாணவர்கள், பெற்றோர்கள் என 3500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் 2ம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார். 

'திருமலை' படம் விஜய்க்கு எழுதிய கதையே இல்லை! இவரை தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... 21 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!

74ம் மாணவர்கள், பெற்றோர் என 3500க்கும் மேற்ப்ட்டோர் கலந்து கொள்ள உள்லனர். இன்று காலை 7 மணியளவில் விஜய் மண்டபத்திற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் இந்த விழாவில் மதிய உணவு பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாதம், கதம்ப சாம்பார், செட்டிநாடு வத்தக்குழம்பு, தக்காளி ரசம், அவியல், அப்பளம், வடை, மோர் வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளைக்கிழங்கு காரக்கறி, ஆனியன் மணிலா, சாண்ட்விச் ஸ்வீட் ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட உள்ளது. இந்த உணவுப்பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!