ஆசிரியர் தகுதித் தேர்வு….தமிழகத்தில்  இன்று முதல் விண்ணப்பங்கள்  விநியோகம்…

 
Published : Mar 06, 2017, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு….தமிழகத்தில்  இன்று முதல் விண்ணப்பங்கள்  விநியோகம்…

சுருக்கம்

TET Exam application

ஆசிரியர் தகுதித் தேர்வு….தமிழகத்தில்  இன்று முதல் விண்ணப்பங்கள்  விநியோகம்…

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில்  நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை வரும்  ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில்  நடைபெறவுள்ளன.து.


இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை இன்று முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.

இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!