கோவையில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

Published : Oct 14, 2022, 09:59 PM ISTUpdated : Oct 15, 2022, 11:05 AM IST
கோவையில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

சுருக்கம்

கோவையில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு இருந்த கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறும் பரப்பான காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கோவையில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு இருந்த கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறும் பரப்பான காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் ஆர்பிகே இரசாயன (கெமிக்கல்) தொழிற்சாலை செயல்ப்பட்டு வருகிறது. அங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மலமலவென அந்த கட்டிடம் முழுவதும் பரவியது. 

இதையும் படிங்க: கேரளாவை போல் திருவண்ணாமலையில் நரபலியா.? மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட 6 பேரால் பரபரப்பு

இதுக்குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த இரண்டு கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்த மக்கள் பயத்தில் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதுக்குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம்… மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தமிழக அரசு வாதம்!!

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் கடுமையாக போரடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானது. தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தொழிலாளர்கள் உயிர்தப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்