தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீரென சோதனையை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஏ.டி.எஸ்.பி எஸ்கால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி
ரைஸ் மில் அதிபர் ஒருவருக்கு 30 லட்சம் தொழில் கடன் வழங்கியதற்கு மூன்று லட்சம் கமிஷன் பெற்றது, மற்றொரு தொழில் கடன் வழங்கியதில் 55 ஆயிரம் கமிஷன் பெற்றது என கணக்கில் வராத 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல். செய்யப்பட்டது. தற்போது திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவசங்கரனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 45 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் நெடுஞ்சாசலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் கைப்பற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803/- ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை