
நாமக்கல்
சிறுமியை கடத்தி பாலியல் கொடுமை செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெரியபட்டியைச் சேர்ந்த செந்தில் (25). இவர், நாமக்கல் மாவட்டம், திருச்சி சாலை ஜெய் நகர் பகுதியில் தங்கில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8-ஆம் தேதி ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, கடத்திச் சென்று செந்தில் பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியை காணவில்லை என்று தந்தை முஸ்தபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தேடிய நாமக்கல் காவலாளர்கள் சிறுமியை மீட்டு, செந்திலைக் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளங்கோவன் அதிரடி உத்தரவிட்டார்.