குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்... குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க குழு அமைப்பு!!

By Narendran SFirst Published Dec 30, 2022, 11:48 PM IST
Highlights

நீர்த்தேக்க தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நீர்த்தேக்க தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் குழந்தைகள் பலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: புத்தாண்டு அன்று பைக்ரேஸ் நடப்பதை தடுக்க நடவடிக்கை... புதிய வியூகம் வகுத்த சென்னை காவல்துறை!!

மேலும் இதுக்குறித்த விசாரணையில் அங்கு தீண்டாமை கொடுமைகளும் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்ததது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தொட்டியில் கழிவு நீரை கலந்த குற்றவாளிகளை கண்டுப்படித்து தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் கழிவுநீரை கலந்த குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி… தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும், புதுக்கோட்டை, இறையூரில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க திருச்சி டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து திருச்சி டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!