#Breaking: மாணவர்களுக்கு மட்டும் தான் விடுமுறை..ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.. பள்ளிகல்வித்துறை அதிரடி..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 8:13 PM IST
Highlights

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 31 ஆம் தேதி வரை மழலையர், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை போடப்பட்டுள்ளது.1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுப்படவேண்டும் என்றும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!