தமிழகத்தில் உருவாகும் ஜேகுவார் லேண்ட்ரோவர்: அனுமதி கோரிய டாடா - எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை தெரியுமா?

By Velmurugan s  |  First Published Dec 22, 2024, 5:22 PM IST

தமிழகத்தில் ஜேகுவார் லேண்ட்ரோவர் காரை தயாரிக்கும் வகையில் புதிய ஆலையை கட்ட திட்டமிட்டுள்ள டாடா நிறுவனம் சுற்றுசூழல் அனுமதி கோரி உள்ளது.


இந்தியாவில் பிரீமியம் வகை கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலையில் தமிழ் நாட்டிலேயே ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் உற்பத்தி செய்ய முடி செய்துள்ளது. இதற்காக ராணிபேட்டை மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் ஆலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க  புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு செப்டம்பர் 28ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

முதல் கட்டமாக ஆலைக்கான முதல் கட்ட கட்டுமானப்பணிகள் ரூ.914 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் முதல் கட்டமாக 1650 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!