Tasmac Closed : மது பிரியர்களுக்கு அலர்ட்... இன்று மாலை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு- வெளியான அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Apr 17, 2024, 8:47 AM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று மாலையோடு பிரச்சாரம் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.
 


இன்று மாலை பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தியுள்ளது. தமிழகத்தில் 6.22 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  தற்போது 18 -19 வயதுடைய வாக்காளர்களாக 10.55 லட்சம் பேர் உள்ளனர். இதில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் 90 ஆயிரம் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து உள்ளனர். நடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Latest Videos

undefined

அதிமுக தயவில் தான் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆனார்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்

இந்த வாக்குச்சாவடிகளில் நாளை மறுதினம் முதல் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வாக்குபதிவை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், வாக்குப்பதிவின் போது எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் தடுக்க மதுபான கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடப்படவுள்ளது. 

3 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு

இதன் காரணமாக மதுபிரியர்கள் நேற்று முதலே மதுபானங்களை வாங்கி குவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் டாஸ்மாக்கில் நூற்றுக்கணக்கான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கினர். இதே போல 3 நாட்கள் தொடர் விடுமறை நாட்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை கள்ள சந்தையில் விற்கவும் அதிகளவு மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.  

Vindhya : உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாத ஸ்டாலின்.. டெல்லிக்கு போய் டைனோசர் பிடிப்பாராம்- விந்தியா கிண்டல்

click me!