திண்டுக்கல் மக்களவை தொகுதி கருத்து கணிப்பு.. அடிச்சு தூக்கும் பாமக.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி..!

By vinoth kumar  |  First Published Apr 17, 2024, 7:21 AM IST

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 


திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் எஸ்டிபிஐ இடையே போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா முந்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அடுத்தடுத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி களநிலவரத்தை சூடாக்கி வருகிறது. குறிப்பாக இந்தமுறை திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தமிழ்நாடு டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: DMK : ஜேசிபி மூலம் பூக்களை வீசிய திமுக இளைஞர் அணியினர்.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி  7,46,523 வாக்குகள் பெற்று 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான ஜோதிமுத்து 2,07,551 வாக்குகளைப் பெற்றார். 

தற்போது தமிழ்நாடு டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விட பாமக வேட்பாளர் திண்டுக்கல் திலகபாமா அதிக வாக்குகளைப் பெறுவார் என தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி 28.80 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ 15.57 சதவீத வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா 35.23 சதவீத வாக்குகள் பெற்று அதாவது 3,90,109  ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவார் என கணித்துள்ளது. 

இதையும் படிங்க:  மீண்டும் தாமரை.. மோடி தான் அடுத்த பிரதமர்.. ராகுல் காந்தி செய்த விதிமீறல்.. அடித்து ஆடும் அண்ணாமலை..

இதற்கு காரணம் டாஸ்மாகிற்கு எதிரான தொடர் போராட்டங்கள் மூலமாக மக்களிடையே நல்ல அறிமுகமான திலகபாமாவிற்கு, திண்டுக்கல் தொகுதியில் பெண் வாக்காளர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒருபுறம் திமுக, அதிமுக இரண்டும் தனது சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக கூட்டணி கட்சியினரைக் களமிறக்கியுள்ளதும், பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக பெண் வேட்பாளரை போட்டியிட வைத்ததும் பாசிட்டிவ் பாயிண்ட்களாக அமைந்துள்ளன. மேலும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் திலகபாமா அறிவித்துள்ள வாக்குறுதிகளும், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகளும் மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

click me!