டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐகோர்ட்டில் ஒரே போடு போட்ட தமிழக அரசு! அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை செயல்பட முடியாது என தமிழக அரசு வாதிட்டது.

TASMAC fraud case! Enforcement Department barred from taking action tvk

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள்  உள்பட 20 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதனிடையே அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில்  3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் மாநில அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

Latest Videos

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லியில் யாரை சந்தித்தார்? வெளியான புகைப்படம்!

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன்: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அமலாக்கத்துறை செயல்பட முடியாது. டாஸ்மாக் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை கூறியுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. 

டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை.  60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்து வைத்தாக வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: இரவோடு இரவாக டெல்லி சென்று வந்த கையோடு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி முடிவு!

எதற்காக சோதனை நடத்தப்பட்டுகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனை நடத்தப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை என்றனர். இதனையடுத்து எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் கூறிய நீதிபதிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தனர். 

vuukle one pixel image
click me!