
தமிழர் பண்பாட்டு மையம் சார்பில் திருப்பூரில் இன்று நடைபெற இருக்கும் சல்லிக்கட்டுக்கான ஆதரவு பேரணியில் பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் கலந்து கொள்கிறார்.
சல்லிக்கட்டுக்கு நடத்தியே ஆக வேண்டும் என்றும் அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்றும் போராட்டகாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம், விவசாயிகள் பிரச்சனை, காவிரி தண்ணீர், சுங்கச்சாவடி கட்டணம் என பல்வேறு போராட்டங்களாக உருப்பெற்று இன்று தீர்வை நோக்கி காத்திருக்கிறது.
இந்த நிலையில், சல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழர் பண்பாட்டு மையம் திருப்பூர் மாவட்டம் சார்பில், பெருமாநல்லூர் சாலை, மில்லர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடங்கும் இந்தப் பேரணி, பல்லடம் சாலையில் உள்ள காட்டன் சந்தைப் பகுதியில் நிறைவு பெறவுள்ளது.
இந்தப் பேரணியில் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் பங்கேற்கிறார்.