கோவை மாவட்டம் சூலூரில் வளர் இளைஞர்களை மூளை சலவை செய்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். சூலூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுடனும் அவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு வைத்துள்ளதா். இந்நிலையில் கடந்த வாரம் வாட்ஸப்பில் தொடர்பு கொண்ட பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கும்பல் கோவைக்கு கிளம்பி வருமாறு வாலிபரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளது.
அந்த கும்பல் கூறிய வார்த்தையை உண்மை என நம்பி வாலிபர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார். அவர் கோவை வந்து இறங்கியவுடன் அவரை ஒரு நபர் அழைத்துக் கொண்டு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட்டு 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நட்பை நம்பி வந்த இளைஞரை இந்த கும்பல் ஆடைகளை களைந்து பெண்கள் அணியும் உள்ளாடைகளை கொடுத்து தலை முடியை அலங்கரித்து பெண்கள் அணியும் செறுப்பையும் கொடுத்து இளம் பெண்போல மேக்கப் செய்து மாற்றியுள்ளனர்.
நாமக்கல்லில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை; பெண்ணின் தந்தை கவலைக்கிடம்
மேலும் ஒரு வாரமாக அவரை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி ஆண்களிடம் கட்டாய வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிப்படைந்த வாலிபர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பிடுங்கி வைத்துக் கொண்டனர். மேலும் அந்த கும்பல் அவரது செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டு தர மறுத்து விட்டது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த இளைஞர் தனது தந்தைக்கு அருகில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறி வாய்ஸ் மெசேஜ் மற்றும் லொக்கேசன் அனுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில் சூலூர் வந்த இளைஞரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட அந்த கும்பலை தேடி சென்றுள்ளனர். அப்போது அது போன்ற ஒரு இளைஞர் தங்களிடம் இல்லை. அவனை நாங்கள் பார்த்ததே இல்லை எனக்கூறி அந்த கும்பல் திருப்பி அனுப்பி விட்டது. இதனை தொடர்ந்து இளைஞரின் குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். அதிரடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த கும்பல் உண்மையை ஒப்புக் கொண்டது.
ராணிபேட்டையில் பயங்கரம்: குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை; நாடகமாடிய கணவன் கைது
மேலும் அந்த இளைஞருக்கு பெண்கள் அணியும் ஆடைகளையும், உள்ளாடைகளையும் அணிவித்து அழைத்து வந்த போது அவனது பெற்றோர் கண்ணீர் மல்க வாரி அணைத்துக் கொண்டனர். பிறகு நடந்த சம்பவத்தை அவனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத இளைஞர் பெற்றோருடனே செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போன்ற பதின்ம இளம் இளைஞர்களை வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் அழைத்து இரவு நேரங்களில் சாலையோரம் வன்புணர்ச்சி தொழிலில் பயன்படுத்துவது சூலூர் பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கும்பல் தனியாக வரும் வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறிப்பதும் இரவு நேரங்களில் சிக்னல்களில் நிற்கும் வாகனங்களில் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.