இந்த மாவட்டங்களில் சுட்டெரிக்க போகும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!

By Manikanda PrabuFirst Published May 27, 2024, 10:54 AM IST
Highlights

கன்னியாகுமரியை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் அதிக மழை இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததற்கிடையே, கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கோடை மழை இயல்பை விட அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமாக பெய்த நிலையில், புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று வெயில் கடுமையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று வெயில் கடுமையாக இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று சில இடங்களில் வெயில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை கூட செல்லும்.

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் வெப்ப அலை இருக்காது. கன்னியாகுமரியை தவிர மற்ற பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை.” என பதிவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரீமல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் காரணமாகவும், தெற்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!