Ramanathapuram Crime | மகனின் காதல் மனைவி எரித்து கொலை; இராமநாதபுரத்தில் மாமனார் வெறிச்செயல்

Published : May 27, 2024, 10:24 AM IST
Ramanathapuram Crime | மகனின் காதல் மனைவி எரித்து கொலை; இராமநாதபுரத்தில் மாமனார் வெறிச்செயல்

சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சொத்து பாகப் பிரிவினையின் காரணமாக மருமகள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள முத்துவிஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜேசு மகன் ஆரோக்கிய பிரபாகர். இவருக்கும், தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில்,இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2023ம் ஆண்டு மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உமாவின் கணவர் அருள் பிரபாகரர் மற்றும் அவரது இளைய மகள் ஜெமிதெரசா என இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உமா தனது மாமனார் வீட்டில் தனது மூத்த மகள் மரியஜெலினா (11) உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனாருக்கும், அவருக்கும் குடும்ப சொத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மாமனார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மருமகள் உமா மீது பெட்ரோலை  ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் துடிதுடித்த அப்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்துள்ளார். பின்னர் தனது மருமகள் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து நாடகமாடி உள்ளார்.

மதுரையில் புகாரளிக்க வந்தவர்களிடம் நகைகளை வாங்கி ரூ.45 லட்சத்திற்கு அடமானம் வைத்த பெண் ஆய்வாளர்; டிஐஜி அதிரடி

இதுகுறித்து கீழத்தூவல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உமாவின் உடலில் அதிக அளவு காயங்கள் இருந்த நிலையில் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்த உமாவின் சகோதரர் தினேஷ் என்பவர் கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி: திருமணத்துக்கு முன்பு சம்பவம்!

அதில் கடந்த 20ம் தேதி  காலை 9 மணி அளவில் உமா அவரது வீட்டில் இருந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மாமனார் ஜேசு பெட்ரோலை அவர் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து உமா தனது தந்தை ஜெயராஜுக்கு என்னை கொல்ல பார்க்கிறார்கள் என தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். முன்னதாக சிகிச்சை பெற்று வந்தபோது அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மாமனார் ஜேசு தன் மீது பெட்ரோல்   ஊற்றியதாக தெரிவித்தார். 

இதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரனை நடத்தியதில் அப்பெண்ணின்  மாமனார் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். சொத்து பாகப்பிரிவினையின் காரணமாக தனது மருமகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
TASMAC Holiday: மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!