Tamilnadu Weather : இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

By Ramya s  |  First Published Mar 20, 2024, 2:25 PM IST

இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதன்படி இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

Latest Videos

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நாடாளுமன்ற தேர்தலுக்கு ரீ ரிலீஸ் செய்த திமுக; வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி

வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனை பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள்.. குரூப் 2 ஏ தரவரிசை எப்போது வெளியிடப்படும் தெரியுமா?

click me!